Subscribe Newsletter

Blood Donor Login
Home Temples Maariyamman Thirukkovil
ArulMigu Maariyamman Thirukkovil
AddThis Social Bookmark Button
There are no translations available.

அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்
Name:
அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்
Address:
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,
உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டம்,
தமிழ்நாடு.
Phone:
04252-224755
Cell:
Nill
Email:
mariammanudt@dataone.in
Web Site:
Nil
Other:
Nil
அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பொள்ளாச்சி – பழனி தேசிய நெடுஞ்சாலையில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. கிழக்கு முகமாக அமைந்த திருக்கோயில்களில் இதுவும் ஒன்று. முழுவதும் கருங்கல்லால் ஆன பழமையைப் பறைசாற்றும் கர்ப்பகிரகம் ,  முன்புறம் ஆதி தெய்வமிவள் என்றுரைக்கும் சுயம்பு வடிவம், அருள் மாரியம்மனை பக்தர்கள் கிழக்கு வாசலில் இருந்தே காணுகிற அளவிற்கு அமைந்த உயர்ந்த பீடம், நெடிய கொடிமரம் , பலிபீடம், மகாமண்டபம், அஷ்டதிக் பலி பீடங்கள், தெற்கு மற்றும் வடக்குப் பகுதியில் கிளை வாசல்கள் தென்மேற்குத் திசையில் ஸ்ரீ சக்தி விநாயகர், வடமேற்கு திசையில் ஸ்ரீ செல்வ முத்துக்குமரன் சந்நிதி இவை இரண்டும் தனித் தனியே அமைந்துள்ளது. அன்னை மாரியம்மனுக்கு குடையாக படர்ந்து அடர்ந்து தனித்து நிற்கும் அரசமரம் இந்த தெய்வீக விருட்சத்தை சுற்றியமைந்த அஷ்டதிக் நாகங்கள், கருவறை உச்சியில் ஓளி பொருந்திய கலசம், தத்துவ வடிவான சிற்ப்பங்கள் இவ்வாலயத்தின் புராதனமான நுண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்த திருத்தேர், உடுமலை நகரின் முத்திரை சின்னங்களாக விளங்குகிறது.

வரலாறு

மாரியம்மன் வணக்கம்:
உலக முழுவது முதவி யுஞ் சிறிதும் தளராத தயபா
இலகு அழகொழுகும் மதி முக மாதரசி
திலக நுதல் அறம் வளர் செங்கை மா
அலகிலா வரமருள் மலரடிப் பணிவோம்.

அருள்மிகு மாரியம்மன் வரலாறு பற்றிய ஆராய்ச்சியில் மா என்பது மழை. மழை தரும் தெய்வம் மாரியம்மன். இருபதெட்டு ஆகமங்களில் தலையாயது ‘ காரணாகமம் ‘ இந்நூலில்  367 -  ஆம் பக்கத்தில்  95 -   வது படலத்தில்  30  ஸ்லோகங்களை கொண்ட ‘ மகாம பிரதிஷ்டா படலம் ‘ மாரியம்மனின் வரலாற்றினைக் கூறுகிறது.

அறிய தவமிருந்து இறைவனிடம் பல வரங்களையும், மகா பலத்தையும் பெற்ற மாரா சூரன் ஆணவமும் , அகங்காரமும் கொண்டு மூவுலகங்களையும் துன்பப்படுத்தினான். அனைவரும் லோக மாதாவான பராசக்தியிடம் முறையிட்டனர். தேவியும் திருவுளமிரங்கி  காத்தருளுவதாக உறுதி பூண்டு, கோபாவேசத்தோடு மாரசுரனின் இரு கால்களையும் பிடித்து மேலே தூக்கி அவனது தலையை பூமியில் அழுத்தி மாரசுரன் பெற்ற வரத்தின் படி மாய்த்தார். தேவர்களும், தானவர்களும் பூ மாறி பொழிந்து நன்றி பெருக்காற்றினர். அன்று முதல் ‘ மாரசுரனை மாய்த்தமையால் மாரியம்மன் ‘  எனும் பெயர் வழங்கலாயிற்று.

மாரியம்மன் நான்கு திருக்கரங்கள் பாசம், டமருகம், கத்தி, கபாலம், எனக் கொண்டு மூன்று திருக்கண்களையும் அக்னிக் கொழுந்து மேல் நோக்கி சுடர் விட்டுப் பிரகாசிக்கும் கிரீடத்தையும், சிவந்த திருமேனியையும், சகல ஆபரணங்களையும் , நீல நிற ஆடையையும் அணிந்து , வலது காலை மடக்கி, இடது காலைத் தொங்க விட்டு சுகாசனத்தில் வீற்றிருக்கிறாள்.

அதிக துன்பத்தைத் தரக்கூடிய சுரம், பிளேக், கண்புரை, பீடை, நீற்குமுளி போன்ற கொப்புளங்கள், அம்மை நோய் முதலான பிணிகளைப் போக்குபவள். வெப்பத்தால் வரும் நோய்களுக்கு குணம் தந்து குளுமை தருபவள் ஆதலாலும், இவளது அருள் நோக்கம் பெற்ற தீர்த்தம் மருந்தாக, மந்திரமாக நோய்களைத் தணிப்பதாலும் ‘ சீதளதேவி ‘ என்றும் அழைக்கப்படுகிறாள்.

மந்திரங்களை ஜபித்து வழங்கப்படும் பொருட்களில், அட்சதை, குங்குமம், திருநீறு, எலுமிச்சம் பழம் இவைகளை காட்டிலும் தண்ணீரில் மிகவும் எளிதாக ஜபம் பற்றிக் கொள்கிறது. இந்த மந்திரம் சீதளாதேவிக்குரியது. அதனாலேயேதான் மாரியம்மன் தீர்த்தர்த்திற்கு அவ்வளவு விசேடம். தன்னை நினைந்து வேண்டுவோருக்கு உடனே அருள் சுரப்பவல் மாரியம்மன்.

மாரியம்மன் மக்களை நோய்களினின்றும் காக்கும் தெய்வமாகவும், ஊர்க்காவல் தெய்வமாகவும், கருமாரியம்மன், மகாமாரியம்மன், குடலுருவி மாரியம்மன், எல்லைமாரியாம்மன், கோட்டை மாரியம்மன், பிளேக் மாரியம்மன், பாடைகட்டி மாரியம்மன், கண்ணாத்தாள், கண்ணபுரத்தாள், தண்டு மாரியம்மன் என்றும் பலப் பெயர்களில்  வணங்கப்படுகிறாள்.

சமய புற மாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன், புன்னைநல்லூர் மாரியம்மன், நாகை நெல்லுக்கடை மாரியம்மன் எனும் பெயர்களில் வணங்கப்பட்டு வரும் மா மகமாயி குடி கொண்ட திருத்தலங்களில் உடுமலை மாரியம்மன் திருத்தலம் ‘ பெரும் புகழும் மகிமையும் உடையதாகும்.

திருத்தலம்

திருத்தல வரலாறு:
கொங்குத் திருநாட்டுத் திருப்பூர் மாவட்டத்தில் அமராவதியும், பாலாரும் அருகே இருந்து அழகு செய்யும் ஊர் உடுமலை. பழனியிலிருந்து மேற்கே  29  கி. மீ தொலைவிலும்,பொள்ளாச்சியிலிருந்து கிழக்கே  30   கி மீ. தொலைவிலும், தெற்கே திருமூர்த்திமலையில் இருந்து  23  கி. மீ தொலைவிலும் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகைக்குட்பட்ட இத் திருக்கோயில் பழமைச் சிறப்பும், பண்பாட்டு நன்னலமும் வாய்க்கப் பெற்றது. இத் திருக்கோயிலில் சாந்தமே உருவாய் சன்மார்க்க திலகமாய் ஏந்திடும் அருளுடன் அருள்மிகு மாரியம்மன் குடிகொண்டு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டியன வேண்டியாங்கு தந்து அருள்பாலிக்கிறாள்.

இங்கு அமைந்துள்ள மூல விக்ரகத்தின் முன் சுயம்பு ஒன்று தானாக எழுந்து, தனிச் சிறப்பு பெற்று அருள் பாலிக்கிறது. சுமார்  200  ஆண்டுகளுக்கு முன்பு சோழிய கவுண்டர் வழி வம்சா வழியினரால் திருக்கோயில் கட்டப்பட்டது. திருக்கோயில் அமைப்பு அறிவு சொரூபமாய், எங்கும் வியாபகமாய் உணர்வுக்கு உணர்வாய் அனுபவிக்கும் தோறும் புதிது புதிதாய் இன்பத்தைத் தோற்றுவிக்கின்ற கருணை மாத்திரம் இயற்றும் இகர,யகர, நகர் இனிய மாரி கலைபடைத்த நாரனிக்கு ‘ கிழக்கு வாசல் கொண்ட கோயிலமைப்பு , எங்கும் இல்லாத புதுமை அமைப்பிலானது.

தருமங்களுக்கெல்லாம் அடிப்படையான அறம் இல்லறமேயாம்! அவ்வில்லறமே நல்லறம் என ஒழுகுகின்றவர்களுக்கு கருணையும் தவறிழைப்பவர்களுக்கு தண்டனையும் புரிஒந்து , மீட்டும் அறத்தின் படியோழுகச் செய்கின்ற உகர, மகர,சிகர, யகர குண்டலினி மாரிக்கு வெற்றி தரும் திசையாம் வடக்கு வாசல் வைத்து நெடுஞ்சாலையை ஒட்டி ஓய்யாரமாக நுழைவாயில் அமைந்துள்ளது.

திருவிழா

தேர்த்திருவிழா :
உற்சவ நிகழ்ச்சிகள் விபரம் நோன்பு சாட்டுதல், கம்பம் போடுதல், கிராம சாந்தி, வாஸ்து சாந்தி, கொடியேற்றம், பூவோடு , மாவிளக்கு, திருக்கல்யாணம், அம்மன் ராதா ரோகணம், தேரோட்டம், பரிவேட்டை, வானவேடிக்கை, கொடியிறக்கம், மஞ்சள் நீராட்டு, மகாபிஷேகம்  முதலியன முக்கிய நிகழ்வுகள். நோன்பு சாட்டுதல் பங்குனி அம்மாவாசைக்கு அடுத்து வரும் செவ்வாய்க் கிழமையன்று நோன்பு சாட்டுதல் எனும் பூஜை நடைபெற்று நகர மக்கள் அனைவருக்கும் பறை சாற்றி அறிவிக்கப்படும். பின்னர் அடுத்த எட்டாவது நாள் செவ்வாய்க் கிழமை  ‘திருக்கம்பம் ‘ நாட்டுதல் நடைபெறும்.

அடுத்த நாள் ‘கொடியேற்று விழா’ வெகு விமரிசையாக நடைபெறும். கொடியேற்று விழா அன்று மர பூஜை , கோடி வஸ்திர பூஜை, அஸ்திர பூஜை, பலிதானங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்று கொடியேற்றப்படும். திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் துவங்குகின்றன. மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்ற வேண்டுகோளின் படி ‘ஆத்மாவையும் ‘ தர்மத்தையும் கீழ்நிலையிலிருந்து உயர் நிலைக்கு கொண்டு செல்ல அருள்புரியும் ‘ அன்னை ‘ மேலும் சிறப்பாக கருணை நோக்கம் கொண்டு அருள் புரிய ஆயத்தமாக காத்திருக்கிறாள் என்பதைக் கோடிஏற்றம் உணர்த்தும். இது ‘ ஸ்திதி’  எனும் காக்கும் தொழிலை குறிக்கும்.

இப்படி தொடங்கும் திருவிழா ஒவ்வொரு நாளும் எழுந்தருளும் திருமேனி உற்சவர் சமம், விசாரம், சந்தோசம், சாது சங்கமம் எனும் நான்கு அறங்களை நான்கு கால்களாகக் கொண்ட ரிஷபம், யானை, காமதேனு, சிங்கம், மயில், அன்னம், குதிரை எனும் வாகனங்களில் பலவித புஷ்ப அலங்காரங்களில் அருள் தரும் கோலத்துடன் வீதி வலம் வந்து வாழ்த்தியருளுவாள்.

எண்ணியன முடித்திட வேண்டி பக்தர்கள் அக்னிச் சட்டியைக் கைகளில் ஏந்தி அம்மனுக்கு வழிபாடு செலுத்துவார்கள். தம் வாழ்வினில் விளக்கேற்றிடும் வண்டமிழ் அன்னைக்கு மாவிளக்கு வைத்து மங்கையர் வழிபடுவர். மேற்ப்படி திருவிழாகாலங்களில் இயல், இசை, நாடகம் என முத்தமிழ் நிகழ்ச்சிகள் மக்கள் மகிழும் வண்ணம் நடைபெறும்.  15 - ஆம் நாள் மாலையில் அம்மனுக்கு திருக்கல்யாணம் சிறப்புடன் நடைபெற்று , அடுத்த நாள் திருத்தேர் விழா பல்வேறு ஊர்களிலிருந்தும் சித்ரூர்களிளிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து இறையருள் பெறுவார்கள்.

பூஜை

1. நித்ய பூஜை:
இத் திருக்கோயிலில் உள்ள மூர்த்திகளுக்கு நாள் தோறும் இரண்டு கால பூஜைகளும் நடைபெற்று வருகிறது. காமிக ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகிறது. புதிய திட்டப்படி காலை 6.00 மணிக்கு நிர்மால்ய பூஜை, காலை 7.30 மணிக்கு காலசந்தி, முற்பகல் 11. 00 மணிக்கு உச்சிகால பூஜை , மாலை 5.00 மணிக்கு சாயரட்சை, இரவு 7.00 மணிக்கு அர்த்தசாம பூஜைகளும் நடைபெறுகிறது.

2. விசேஷ பூஜை
கீழ்க்கண்ட உற்சவ காலங்களில் இத் திருக்கோயிலில் விசேஷ பூஜைகள் , சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

சித்திரை 1, வைகாசி விசாகம் , ஆடிமாத செவ்வாய் , வெள்ளி , ஆடிப்பூரம் , நாகசதுர்த்தி, தீபாவளி, கந்தசஸ்டி , திருக்கார்த்திகை, தனூர்மாதம், தைப்பொங்கல், தைப்பூசம், பங்குனி உத்திரம், மாதாந்திர பௌர்ணமி.

வழிப்பாட்டுக் கட்டணங்கள் :
அர்ச்சனை சீட்டு 1க்கு ரூ .2.00
தேங்காய்ச் சீட்டு 1க்கு ரூ .1.00
அபிஷேகச் சீட்டு 1க்கு ரூ .50.00
சிறப்பு தரிசனம் 1க்கு ரூ .5.00
சிறப்பு தரிசனம் (விசேஷ காலங்களில்) 1க்கு ரூ .10.00
முடி காணிக்கைச் சீட்டு 1க்கு ரூ .10.00
திருமஞ்சனம் 1க்கு ரூ .2.00
மாவிளக்கு/பொங்கல் சீட்டு 1க்கு ரூ .2.00
காத்து குத்து கட்டணம் 1க்கு ரூ .10.00
உப்பு மாற்றுச் சீர்,உப்புக்கூடை 1க்கு ரூ .25.00
பூவோடு சீட்டு 1க்கு ரூ .25.00
பூவோடு மற்றும் பூவோடு வளர்த்தல் 1க்கு ரூ .100.00

அபிஷேக விபரம்:
அபிஷேக நேரம் காலை 10.30 மணி அரிசி மாவு, மஞ்சள், திருமஞ்சனப்பொடி, பஞ்சாமிர்தம் , பால், தயிர், இளநீர், விபூதி, பன்னீர், சந்தானம்.
கோயில் நடை திறந்திருக்கும் நேரம்:
ஒவ்வொரு நாளும் காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும் பிற்பகல் 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் , செவ்வாய் , வெள்ளி கிழமைகளில் காலை 6.00
மணி முதல் இரவு 9.00 மணி வரை ஆலயம் திறக்கப்பட்டு இருக்கும்.

அன்னதானம்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் சீரிய திட்டங்கள் பலவற்றுள் சிறந்து  விளங்கும் அன்னதானத் திட்டம் , உடுமலை நகர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில்  06. 11  2009 முதல் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. திட்டத்திற்கு பொருளாகவோ, பணமாகவோ…………………………………….
நன்கொடை விபரம்:
1. நாள் ஒன்றுக்கு  100  நபர்களுக்கு ஒருவேளை உணவு வழங்க ரூ. 1400/-
2. நாள் ஒன்றுக்கு  50  நபர்களுக்கு ஒருவேளை உணவு வழங்க ரூ.  700/-
3. நிரந்தர வைப்பு திட்டம் ரூ.  20000/-  (வருடத்தில் ஒரு நாள் உபயதாரர் விரும்பும் நாளில்  100  நபர்களுக்கு உணவு வழங்க )
4. மொத்த வைப்பு நிதி ( corpus fund)  ஏற்ப்படுத்த நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு வருமானவரிச் சட்டம்  80 G இன் படி வரி விலக்கு உண்டு.
5. நன்கொடையாக அரிசி , காய்கறி மற்றும் இதர பொருட்கள் வழங்கலாம்.
6. பிறந்த நாள், திருமண நாள், பதவி ஏற்ற நாள், தொழில் , வியாபாரம் ஆரம்பித்த நாள் , புதுக்கணக்கு துவக்க நாள் அன்னதானம் செய்தல் உத்தமம் .

அன்னதான நன்கொடை பணமாகவோ, வங்கி  ரைவோலையாகவோ அனுப்பவேண்டிய முகவரி:

நிர்வாகி,
அன்னதானத்திட்டம்,
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ,
உடுமலைப்பேட்டை ,
திருப்பூர் மாவட்டம் – 642126.

தொடர்புக்கு

பக்தர்கள் தங்களது காணிக்கைகளை பணமாகவோ, வங்கி வரைவோலையாகவோ அனுப்பவேண்டிய முகவரி
செயல் அலுவலர் ,
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,
உடுமலைப்பேட்டை,
திருப்பூர் மாவட்டம்,
தமிழ்நாடு.
தொலை பேசி எண் : 04252 224755
Email ID                       : mariammanudt@dataone.in
செயல் அலுவலர்  : இரா. சங்கர சுந்தரேசுவரன்
அறங்காவலர்         : யு . எஸ் . எஸ். ஸ்ரீதர்
 

Who's Online

We have 4 guests online